கூகிளின் இலவச மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சேவையை இரான் தடை செய்துள்ளதாகவும், இதற்குப் பதிலாக இரானிய அரசே வேறோரு மின்னஞ்சல் சேவையை வழங்க இருப்பதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இரானின் தொலைத் தொடர்பு நிறுவனம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக புதன் கிழமையன்று அந்த பத்திரிகையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இரானில் அரசுக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல்களை அடுத்து, எதிர்கட்சிகளை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை இரானிய அரசு எடுத்து வருவதாக வால் ஸ்ட்ரீட் குறிப்பிடுகிறது. சமூக இணைய தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் யூடியூப் ஆகியவை தொடர்ந்து கன்காணிக்கப்பட்டு வருகின்றன.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




