இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மதிமுக தலைவர் வைகோ ராஜ்யசபா எம்.பி. ஆகிறார்!

E-mail அச்செடுக்க
நீண்ட நாட்களாக பதவி எதுவும் இன்றி இருந்து வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ராஜ்யசபா எம்.பி. ஆகக் கூடும் என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

டெல்லி மேல்சபை எம்.பி.க்கள் மாநிலங்களில் இருந்து, எம்.எல். ஏ.க்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்தந்த மாநிலங்களில் காலியாகும் எம்.பி.க்கள் பதவிக்குப் பதிலாக புதிய எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல்சபைக்கு அ.தி.மு.க. சார்பில் எம்.பி.க்களாக இருந்து வரும் எஸ்.அன்பழகன், கே.மலைச்சாமி,  டி.டி.வி.தினகரன், என்.ஆர். கோவிந்தராஜர், காங்கிரஸ் எம்.பி. சுதர்சனம் நாச்சியப்பன், பா.ம.க. மேல் சபை எம்.பி.யும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ஆகியோர் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதற்குப் பதிலாக தமிழ் நாட்டில் இருந்து புதிதாக 6 மேல்சபை எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த பதவிக்கு தி.மு.க-காங்கிரஸ், அ.தி.மு.க-ம.தி.மு.க கூட்டணிகள் சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

டெல்லி மேல்சபை எம்.பி. பதவிக்கு தமிழ் நாட்டில் இருந்து ஒருவர் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்றால் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வேண்டும். அந்த வகையில் பார்த்தால் தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணிக்கு 138 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறது. எனவே தி.மு.க. கூட்டணி சார்பில் 4 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப் படுவர். அ.தி.மு.க.வில் 55 எம்.எல்.ஏ.க்கள் தற்போதைக்கு உள்ளனர்.ம.தி.மு.க.வுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கொடுத்தால் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 73 ஆகும். எனவே இந்த கூட்டணி சார்பில் 2 பேர் மேல்சபை எம்.பி.க்கள் ஆக முடியும்.

தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் 4 எம்.பி.க்களில் இருவர் தி.மு.க. சார்பிலும் இருவர் காங்கிரஸ் சார்பிலும் நிற்பார்கள் என்று கூறப்படுகிறது. அப்படி இருகட்சிகளும் சமமாக இடங்களைப் பிரித்துக் கொண்டால் காங்கிரஸ் சார்பில் தங்கபாலு டெல்லி மேல்சபை எம்.பி. ஆகக்கூடும்.

இது போல அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 2 பேர் மேல்சபை எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அதில் ஒரு சீட் அ.தி.மு.க. வுக்கும், மற்றொரு சீட் ம.தி. மு.க.வுக்கும் ஒதுக்கப்படலாம் என்று அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ம.தி.மு.க.வுக்கு வாய்ப்பு கிடைத்தால் வைகோ டெல்லி மேல்சபை எம்.பி. ஆவார்
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்