நெல்லை விக்கிரமசிங்கபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால், நெல்லுக்கு குவிண்டாலுக்கு 1050 ரூபாயும், கரும்புக்கு டன்னுக்கு 1400 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது. இதை நெல்லுக்கு 1,500 ரூபாயாகவும்,கரும்பு டன்னுக்கு 2,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
ரேஷன் கடையில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு விற்கப் பட்டாலும், வெளி மார்க்கெட்டில் 32 ரூபாய்க்கு மேல் விற்கப் படுகிறது. எனவே அரிசி விலையை கட்டுப்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கம் மூலம் 4 சதவீத வட்டியில் கடன் வழங்க வேண்டும்.
ஆன்லைன் வர்த்தகத்தை உடனே தடை செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி நாடு முழுவதும் அடுத்த மாதம் (மார்ச்) 5-ந்தேதி மறியல் போராட்ட மும், 15-ந்தேதி பாராளு மன்றம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெறும்.
பென்னா கரம் தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும். விடுபட்ட வாக்காளர்களை உடனே பட்டியலில் சேர்க்க வேண்டும். பென்னாகரம் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரிக்கும் என்று ஆர்.நல்லகண்ணு கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




