மனித மூளையைப் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்த உயிரியல் விஞ்ஞானிகள் மூளையில் ஒரு காதல் வங்கி இருப்பதை கண்டு பிடித்தனர். காதல் வங்கி செயல்பாடு பற்றி பிரபல செக்சாலஜிஸ்ட் டாக்டர் காமராஜ் (பெயர் பொருத்ததைப் பாருங்கள்) கூறியதாவது:-மூளையில் காதல் வங்கியை செயல்பட வைப்பது ஒருவித ரசாயன கலவை. காதலர்கள் ஒருவரை ஒருவர் உணர்வுப் பூர்வமாக பார்க்கும்போது இந்த ரசாயன கலவை மின்னல் வேகத்தில் செயல்படுகிறது. ஆண்- பெண் காதல் வங்கியில் தங்களுக்கு பிடித்த முகம் “டெபாசிட்” செய்யப்பட்டு விட்டால் எளிதில் அந்த வங்கியில் ஏற்பட்ட ரசாயண மாற்றம் மாறாது. அந்த ரசாயணமே அந்த பெண்- ஆண் முகத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும்.
அப்படிப் பார்க்கும்போது அந்தக் காதல் வங்கியின் செயல்பாடு முன்பை விட பல மடங்கு வேகத்தில் செயல்படும். அப்போது காதல் எண்ணங்களைத் தவிர வேறு எதையும் நாடாது. காதல் வங்கியில் ஒரு காதல் ஜோடி “டெபாசிட்” செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி சொல்கிறேன்.
காதலர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துதல் பிடித்தமான பரிசுப் பொருள் வாங்கிக் கொடுப்பது (முதலாளித்துவ பூனைக்குட்டி?), பாராட்டிப் பேசுவது, விட்டுக் கொடுப்பது போன்ற செயல்பாடுகளால் காதல் வங்கியில் சேமிப்பு அதிகமாகும். இந்த மாதிரியான சொல்களைத் தான் டெபாசிட் என்கிறோம்.
காதல் வங்கியில் “வித்டிரா” (எடுப்பு) அதிகரித்தால் வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டு விடும். காதல் ஜோடி ஒருவரை ஒருவர் வெறுப்பது, திட்டிக் கொண்டிருப்பது, சந்தேகப்படுவது, நம்பிக்கை இல்லாதது, பொய் பேசுவது, பழி போடுவது போன்ற சொல்களில் ஈடுபடுவதை “எடுப்பு” என்கிறோம். இந்த எடுப்பு அதிகரித்தால் காதல் வங்கியில் உள்ள சேமிப்பு குறைந்து பூஜ்ஜிய நிலையை எட்டிவிடும். இந்த பூஜ்ஜிய நிலை வரும் போதுதான் காதல் ஜோடி பிரியும் நிலை ஏற்படுகிறது என்கிறார் டாக்டர் காமராஜ்.
மனித மூளையில் உள்ள வங்கியை அனைவரும் சிறந்த முறையில் பயன் படுத்துவதற்காக இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் கடந்த சனிக்கிழமை (13-02-2010) அன்று காதல் வங்கி தொடங்கப் பட்டது. இதில் ஏராளமான வி.ஐ.பி. தம்பதியர், திரையுலக நட்சத்திரங்கள், காதல் ஜோடிகள் கலந்து கொண்டனர்.
காதல் வங்கியை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் தொடங்கி வைத்தார். டாக்டர்கள் காமராஜ், ஜெயராணி ஆகியோர் காதல் வங்கி செயல்பாடு பற்றி விளக்கி பேசினார்கள். பின்னர் அனைவருக்கும் காதல் வங்கி பாஸ் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. இதுகுறித்து டாக்டர் ஜெயராணி கூறும்போது:-
காதல் வங்கியில் முக்கியமாக 5 விஷயங்கள் உள்ளன. 1. டெபாசிட், 2.எடுப்பு, 3. சேர்ந்து முடிவு, 4. காதலில் நேர்மை, 5. காதலுக்கு நேரம் ஒதுக்குவது.காதல் வங்கியில் உறுப்பினராக சேரும் அத்தனை ஜோடிக்கும் காதல் வங்கி பாஸ் புத்தகம் கொடுத்து விடுவோம்.அதில் இருவரும் ஒவ்வொரு நாளும் தங்கள் கணக்கில் எவ்வளவு “டெபாசிட்” செய்துள்ளோம், எடுத்துள்ளோம் (வித்டிரா) என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அந்த புத்தகத்தை இரவில் புரட்டிப் பார்க்கும்போது காதல் வங்கி கணக்கில் சேமிப்பு அதிகமாக இருந்தால் வீட்டில் எல்லையில்லா மகிழ்ச்சி இருக்கும்.
சேமிப்பு பூஜ்ஜியமாக இருந்தால் நாள் முழுவதும் நிம்மதி இல்லாமல் வீட்டில் ஒரே போராட்டமாக இருக்கும். காதல் வங்கி கணக்கில் பூஜ்ஜியம் உள்ள தம்பதியருக்கு மருத்துவ நிபுணர்கள் இலவசமாக ஆலோசனை வழங்குவார்கள்.
நாங்கள் தொடங்கியுள்ள இந்த வங்கியில் அனைவரும் இலவசமாக சேர்ந்து கொள்ளலாம். இந்த மாதிரியான வங்கிகள் நாட்டில் பெருகினால் விவாகரத்துக்கள் குறையும் என்கிறார் டாக்டர் ஜெயராணி.
அமெரிக்க வங்கிகளைப் போல் திவாலாகாமல் இருந்தால் சரி!
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது |
|---|




