
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் மோதும் இந்திய அணி வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் நேற்று அறிவித்தது. இந்த அணி முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது.
துலீப் டிராபி இறுதிப் போட்டியில் இரட்டை சதம் அடித்து மேற்கு மண்டல அணியை சாதனை வெற்றி பெற வைத்த ஆல்ரௌண்டர் யூசுப் பதான் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். அதுபோல அபிஷேக் நய்யார் , வேகப் பந்து வீச்சாளர் பிரவீன் குமார் மீண்டும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
காயம் காரணமாக காம்பீரும் ,யுவராஜ் சிங்கும் அணியில் சேர்க்கப் பட வில்லை. சகோதரியின் திருமணம் காரணமாக ஹர்பஜன் சிங்கும் இடம்பெற வில்லை.
அணி விபரம் : டோனி ( கேப்டன் / விக்கெட் கீப்பர் ), டெண்டுல்கர். சேவாக், தினேஷ் கார்த்திக் , விராத் ஹோஹ்லி , ரவீந்திர ஜடேஜா , சுரேஷ் ரெய்னா , அஷ்வின் , ஜாகீர் கான் , சுதீப் தியாகி , ஆஷிஷ் நெஹ்ரா , யூசுப் பதான் , அபிஷேக் நய்யார் , அமித் மிஸ்ரா, பிரவீன் குமார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




