இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஏர் இந்தியா நிதி நெருக்கடியை போக்க ரூ.800 கோடி பங்கு முதலீடு

E-mail அச்செடுக்க
இந்திய தேசிய விமானப் போக்குவரத்து சேவையான ஏர் இந்தியாவை நடத்தி வரும் என்ஏசிஐஎல் நிறுவனத்தில் ரூ.800 கோடிக்கு பங்கு முதலீடு செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு வியாழக் கிழமை (18-02-2010) அன்று அனுமதி வழங்கியுள்ளது. இந்த பங்கு முதலீடானது அந்த நிறுவனத்தின் நிதிநிலைமையை மேம்படுத்துவதுடன் வெளிச்சந்தையில் இருந்து அதிக செலவில் கடன் வாங்குவதை தவிர்க்கும்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் என்ஏசிஐஎல்-ன் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து என்ஏசிஐஎல்-ல் நிதி சீரமைப்பு செய்வது எனவும் அதனை செயலாளர்க்ள கமிட்டி கண்காணிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் என்ஏசிஐஎல்-ன் நிதி நிலையை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன்படி என்ஏசிஐஎல்-ன் நிதி சீரமைப்புத் திட்டம் அமைச்சர்கள் குழுவிடம் அளிக்கப்பட்டது. இது பற்றி அமைச்சர்கள் குழு விரிவாக ஆலோசனை நடத்திய பிறகு அதில் பங்கு முதலீடு செய்ய ரூ.800 வழங்குவது எனவும் இதனை பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்புவது எனவும் பரிந்துரை செய்யப்பட்டது.

தற்போது என்ஏசிஐஎல்-ல் செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் ரூ.145 கோடியாகும். இது இந்த நிறுவனத்தின் அளவுக்கு போதுமானதாக இல்லை. இதன் காரணமாக இந்த நிறுவனம் அதிகரித்து வரும் செலவாலும் குறைவான வருவாயாலும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்