இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஒரு ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

E-mail அச்செடுக்க

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான முதல் ஒரு நாள் போட்டி நேற்று ஜெய்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது . நட்சத்திர வீரர் டெண்டுல்கர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். சேவாக் 46 ரன்களும், தினேஷ் கார்த்திக் 44 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ரெய்னா அதிக பட்சமாக 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார் . இந்திய அணி நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவர் முடிவில் ௯ விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் சேர்த்தது .

299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத் துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி 297 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கல்லிஸ் அதிக பட்சமாக  89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் பிரவீன் குமார் பந்து வீச முதல் பந்தில் பர்னெல் ஒரு ரன் எடுக்க அடுத்த பந்தில் ஸ்டெயின் போல்டாகி வெளியேறினார்.  கடைசி பந்தில் 2 ரன் தேவைப் பட்ட நிலையில் ஒரு ரன் சேர்த்து மறு ரன்னுக்கு ஓடிய பர்னெல் ரன் அவுட்டானார்.

ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப் பட்டார் . இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில்  இந்திய அணி 1-0௦ என முன்னிலை பெற்றுள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்