ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் 50 ஆண்டுகால அரசியல் பணிகளைப் பாராட்டி சென்னையில் ம.தி.மு.க.வினர் பிரம்மாண்ட மாநாடு நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.இதுபற்றி ம.தி.மு.க. தென்சென்னை மாவட்ட செயலர் வேளச்சேரி மணிமாறன் கூறியதாவது:-
அரசியல் பொது வாழ்வில் 50 ஆண்டுகள் பொன்விழா காணும் பொதுச் செயலாளர் வைகோவின் மக்கள் சேவை பணியை பாராட்டி சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமாக மாநாடு நடத்தப்படும். தமிழ்நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கில் தொண்டர்களை திரட்டி வெற்றி மாநாடாக இதை நடத்த உள்ளோம்.
இம்மாநாட்டில் வைகோவின் சிறப்புரை மேலும் எழுச்சியை உருவாக்கும். கட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இந்த மாநாடு அமையும். மாநாட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
என்று கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




