நேற்று முதல் தொடங்கிய லுஃப்தான்சா விமானிகளின் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. விமானிகளின் பணி உத்தரவாதம் குறித்த பேச்சுவார்த்தைக்கு லுஃப்தான்சா நிர்வாகம் முன்வந்ததை அடுத்து இந்த வேலை நிறுத்தம் தொடங்கிய 24 மணிநேரத்துக்குள்ளாகவே திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
நாள் தோறும் 1800 விமான சேவைகளை அளிக்கும் லுஃப்தான்சா வேலை நிறுத்தம் தொடங்கிய நேற்று வெறும் 960 சேவைகளை மட்டுமே அளிக்க இயன்றது. கிட்டத்தட்ட 10,000 பயணிகள் அவதிக்குள்ளாயினர். விமானிகள் பணிக்குத் திரும்பிய போதும் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்ப பல நாட்கள் ஆகலாம் என்று தெரிகிறது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




