இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: பொன்சேகா தலைமையில் புதிய கூட்டணி உதயம்

E-mail அச்செடுக்க
வருகிற ஏப்ரல் 8 அன்று நடைபெற உள்ள இலங்கை பாராளுமன்ற  தேர்தலில்  அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாக அவரது மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட சரத் பொன்சேகா தரப்பினர் பிரதமர் பதவி, தலைமை, அமைச்சர் பதவிகள் உட்பட சில கோரிக்கைகளை விடுத்ததாகவும் அதை ஏற்க மறுத்த முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியுடன் சேர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி என்ற புதிய கூட்டணி ஒன்றை சரத் பொன்சேகா தரப்பினர் ஏற்படுத்தியுள்ளனர். இக்கூட்டணியின் தலைவராக சரத்பொன்சேகா இருப்பார். புதிய கூட்டணி அறிவிப்பு சிறையில் இருக்கும் பொன்சேகாவின் அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது என்று அவரது மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்தார்.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிட பொன்சேகாவுக்கு அனுமதி கிடைக்குமா? என்று தெரியவில்லை. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இலங்கை பாராளுமன்ற தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்