அடுத்த மாதம் மார்ச் 12-ந் தேதி முதல் ஏப்ரல் 25-ந் தேதி வரை நடைபெற உள்ள ஐ.பி.எல் 3 வது சீசன் இரவு நேர போட்டிகளாக நடத்த திட்டமிடப் பட்டுள்ள நிலையில் இரவு நேரங்களில் போட்டி நடைபெறுவதால் ஏற்படும் மின்சார விரையத்தை தடுக்கக் கோரி மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவை சேர்ந்த சுபாஷ் தத்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
மேலும் பொது மக்களின் அடிப்படை வசதி மற்றும் தேவைகளை போட்டி அமைப்பாளர்கள் புறக்கணிப்பதை நீதிமன்றம் அனுமதிக்க கூடாது என்றும் கிரிக்கெட் போட்டிகளுக்காக மாநில அரசுகளின் நிதியில் இருந்து செலவிடப்படும் தொகையையும் போட்டி நடத்தும் அமைப்பாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். அது தொடர்பாக, கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ள அந்தந்த மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




