இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சச்சின் இரட்டை சதம்! இந்தியா அபார வெற்றி

E-mail அச்செடுக்க

குவாலியர்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று குவாலியரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.  தொடக்க  வீரர்களாக சச்சின் சேவாக்  களம் இறங்கினர் 3.5 ஒவரில் சேவாக் 9 ரன் எடுத்த நிலையில் பெர்னல் பந்தில் அவுட் ஆனார்.

சச்சினுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக்  நிதானமாக  விளையாடி  ரன் சேர்த்தனர் 33.2 ஒவரில் 79 ரன் எடுத்த நிலையில் கிப்ஸ்சிடம் கேட்சாகி  வெளியேறினார். தொடர்ந்து விளையயடிய  சச்சின்  தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை நாளாபுறமும் சிதறடித்தார்.90-வது பந்தில் சச்சின் தனது 46 -வது சத்த்தை பூர்த்தி செய்தார், இதில் 13 பவுன்ரிகள் அடங்கும் தினேஷ்கார்த்திக்கை தொடர்ந்து யூசுப்பதான் 39 ரன் எடுத்து அவுட் ஆனார்.


அதன் பின் களம் வந்த டோனி  சச்சினுடன் நிலைத்து நின்று ஆடினார். ஆட்ட இறுதியில்  இந்தியா 50 ஒவரி ல்  401 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய சச்சின் 147 பந்தில் 25 பவுன்ரிகள் மற்றும் 3 சிக்சருடன்  200 என்ற  இமாலய ஸ்கோர்ரை எட்டி உலக சாதனை படைத்தார். டோனி அதிரடியாக விளையாடி 35 பந்தில் 7 பவுண்ரி 4 சிக்சர் உடன் 68   ரன்களும் எடுத்தனர்.  அடுத்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.  ஆம்லா 34 ரன்கள் எடுத்தார்.


இதையடுத்து இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் வில்லியர்ஸ் 114 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்