அஹ்மதாபத்தில் நடந்த மூன்றாம் மற்றும் இறுதி போட்டியில் தெ ஆப்ரிக்கா 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த தெ. ஆப்ரிக்காவிற்கு தொடக்க வீரர்கள் போஸ்மேன், அம்லா நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவரும் தலா 68, 87 ரன்கள் எடுத்து வெளியேற, பின்னர் ஆட வந்த கேப்டன் கல்லீஸ் மற்றும் டி வில்லர்ஸ் தங்களின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் 300 ரன்களை தாண்ட உதவினர்.
கல்லீஸ் 104 ரன்களும், டி வில்லர்ஸ் 102 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதுவும் டி வில்லர்ஸ் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. 59 பந்துகளில் 102 ரன்கள் எடுத்த அவர், 11 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் விளாசியிருந்தார். இறுதியில் 2 விக்கெட் இழப்பிற்கு 365 ரன்களை எடுத்து இருந்தது. பின்னர் விளையாட வந்த இந்தியா, தென் ஆப்ரிக்கா வீரர்களின் பந்து வீச்சிற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியது. வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். விராட் கொஹ்லி, ரோஹித் சர்மா, ரெய்னா மட்டுமே நிலைத்து விளயாடி இந்தியா கவுரமான ரன்களை எடுக்க உதவினர். இறுதியில் 44.3 ஓவர்களில் 275 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியை சந்தித்தது.ஏற்கனவே தொடரை வென்று விட்ட இருமாப்பில் இருந்த இந்தியா, மூத்த அனுபவ வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து, இளம் வீரர்களை களம் இறக்கியது. ஆனால் இந்திய வீரர்களின் சொதப்பலான ஆட்டம் அஹ்மதாபாத் கிரிக்கெட் ரசிகர்களை வெறுப்படைய செய்தது.
விருது வழங்கும் விழாவில் இந்திய அணித் தலைவர் தோனி வரும்போது ரசிகர்கள், தோனியை கிண்டலடிக்கும் விதத்தில் நடந்துக் கொண்டனர். ஒரு தின தொடர் நாயகனாக, சாதனை மன்னன் டெண்டுல்கரும், ஆட்ட நாயகனாக டிவில்லர்ஸும் தேர்வு செய்யப்பட்டனர். இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டியில் இந்தியா டெஸ்ட் தொடரை சமன் செய்தும், ஒருதின போட்டி தொடரை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




