பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக வாக்கர் யூனுஸ் நியமிக்கப்படலாம் என தெரிகிறது. இது குறித்து பேசிய பாக் கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர், வாக்கர் யூனுஸுடன் வாரியம் இது குறித்து பேசி வருவதாகவும், இன்னும் சில தினங்களில் நியமனம் குறித்து முறையான அறிவிப்பு வெளிவரலாம் என தெரிவித்தார். வாக்கர் யூனுஸ் அவ்வாறு நியமிக்கப்படும் பட்சத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் நியமிக்கப்படும் நான்காவது பயிற்சியாளராக இருப்பார்.
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்த பாகிஸ்தான் அணி, டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகளில் படுதோல்வியை சந்தித்தது. அதோடு மட்டுமில்லாமல், விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் போட்டியை நிர்னயித்தார் என்ற குற்றஞ்சாட்டும் பாகிஸ்தான் அணியை சர்ச்சைக்குள்ளாக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|