இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க சிவசேனா கோரிக்கை

E-mail அச்செடுக்க

சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்க சிவ சேனா கட்சி கோரியுள்ளது. டெண்டுல்கர் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார் என்றும், பாரத ரத்னா விருதுக்கு அவர் முழு தகுதியானவர் என சிவசேனா கட்சியின் நிர்வாக தலைவர், உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

சென்ற வாரம் குவாலியரில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் டெண்டுல்கர் 200 ரன்கள் எடுத்து ஒருதின போட்டியில் இரு சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெயர் பெற்றார். இதற்காக உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களிடமிருந்து பாராட்டு மழை வந்து கொண்டிருக்கும் வேளையில், மஹாராஷ்டிர முதல்வர் அசோக் சவான், டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது  வழங்க வேண்டும் என முதலில் கோரிக்கை விடுத்தார்.

தற்போது அவரை தொடர்ந்து சிவசேனா கட்சியும் அதே கோரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்