இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

நடிகை வீட்டில் ரூ.80 லட்சம் பணம்-நகை கொள்ளை!

E-mail அச்செடுக்க
பிரபல இந்தி நடிகை ஹேமமாலினியின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் ரூ. 80 இலட்சம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஹேமாமாலினியின் கோகுலம் என்று பெயரிடப்பட்டுள்ள பங்களா, மும்பை புறநகர் பகுதியான கோரேகானில் உள்ளது. ஹேமமாலினி தன்னுடைய சொந்த வேலைகளுக்காக நாக்பூர் சென்றிருந்தார். வேலைகளை முடித்து விட்டு அவர் மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது, வீட்டு ஜன்னல் உடைக்கப்பட்டு கப்போர்டில் வைக்கப்பட்டிருந்த பணமும், தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் திடுக்கிட்டார்.

மொத்தம் 75 லட்ச ரூபாய் ரொக்க பணமும், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளும் கொள்ளை போயிருந்தன. இதுகுறித்து அவர் உடனடியாக கோரேகான் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

காவல்துறையினர் உடனடியாக ஹேமமாலினியின் வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்