இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

இலங்கை கடற்படை - தமிழக மீனவர்கள் மோதல் பிரச்சினைகள் உண்மையல்ல! - அதுல செனரத்

E-mail அச்செடுக்க
இலங்கை கடற்படை - தமிழக மீனவர்கள் பிரச்சினைகள் உண்மை அல்ல!

கச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழா வெகுசிறப்பாக நேற்று நடந்து முடிந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.இலங்கை கடற்படை இதற்கான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்திருந்தது.

கச்சதீவு வருடாந்த திருவிழா இலங்கை கடற்படையினருக்கும்,தமிழக மீனவர்களுக்கும் இடையில் நட்புறவுப்பாலமாக அமைந்துள்ளது என கடற்படை ஊடகப்பேச்சாளர் காப்டன் அதுல செனரத் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் ராமேஸ்வரத்திலிருந்து 3000 பக்தர்கள் கச்சதீவு திருவிழாவில் கலந்துகொண்டனர். இவர்கள் 114 படகுகளில் வந்துசேர்ந்தனர்.இலங்கையின் சர்வதேச கடற்பரப்பு எல்லையில் இலங்கை கடற்படையினர் அவர்களை பொறுப்பேற்றுக்கொண்டனர் என்றும் கேப்டன் செனரத் மேலும் கூறினார்.

கடந்த காலங்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது போன்ற சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது. தமிழகத்திலுள்ள ஒரு சிறுகுழுவினர் மட்டுமே இவ்வாறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.அதில் உண்மை இல்லை.

இம்முறை வருகை தந்திருந்த பக்தர்கள் மீனவ சமூகத்தை சார்ந்தவர்கள். இலங்கை கடற்படையினரின் பணிகளை அவர்கள் வெகுவாகப்பாராட்டினர். தங்களுடைய படகுகளில் எமது கடற்படையினருக்கு நன்றி தெரிவித்து சுலோகங்களைப் பொருத்தியிருந்தனர் என இலங்கை கடற்படை பேச்சாளர் பதிலளித்தார்.

சுமார்  ஏழுஆண்டுகளுக்குப்பின் கச்சதீவு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்