கட்சிதாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக தமிழக சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பனிடம் மனு கொடுத்துள்ளனர்
இதுதொடர்பாக தமிழக சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் மாதத்திற்குள் தாக்கல செய்யப்பட வேண்டும். புதிய சட்டசபை கட்டிடம் திறக்கப்பட்டதும் அங்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெயங்கொண்டம் ராஜேந்திரன், கோவில்பட்டி ராதாகிருஷ்ணன் மீது கட்சிதாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக சார்பில் மனு கொடுத்துள்ளனர். அந்த 2 எம்.எல்.ஏ.க்களிடமும் இது தொடர்பாக விளக்கம் கேட்கப்படும் என்று சபாநாயகர் ஆவுடையப்பன் கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




