கொழும்பு: முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்த போராளிகளை தற்போதைய சூழலில் விடுதலை செய்ய முடியாது என பிரிகேடியர் சுகந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும்படி சர்வதேச பொது மன்னிப்புச்சபை உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அரசின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.
தற்போது10,732 போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள ரணசிங்க,புனர்வாழ்வளிக்கப்பட்ட பிறகேவிடுவிக்கப்படுவர் என்றும் இதற்கு மேலும் பல ஆண்டுகள் செல்லலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே ஏற்கனவே 14,000 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்த இலங்கை அரசும் தற்போது 10 ,732 பேர் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருப்பதன் மூலம் மீதமுள்ள 4000 பேரின் கதி என்னவானது என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




