மத்திய பொது பட்ஜெட் குறித்து கூட்டணிக்கட்சிகள் முதல் எதிர்க்கட்சிகள் வரை பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காது வேடிக்கை பார்த்தன. தற்போது அனைத்து பொருட்களின் மீதும் இறக்குமதி வரி, உற்பத்தி வரி, விற்பனை வரி என பல்வெஏறு வரிகளை உயர்த்தி, மேலும் விலைவாசி உயர வழி ஏற்படுத்தியுள்ளனர்.
ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் பெறுகிறவர்கள், மத்திய அரசின் பட்ஜெட்டில் ரூ.12 ஆயிரம் சலுகை பெறுகின்றனர்.ஆனால் இந்த சலுகையும் மேற்கூறிய வரிகளால் செலவாகிவிடும்.
ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி ரெயில்வே கட்டணம் உயராது என்றார். ஆனால் நிதியமைச்சர் ரெயில் கட்டணத்தின் மீது சேவை வரி விதித்துள்ளார். ஆகவே, மறைமுகமாக ரெயில்வே கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.23 மட்டுமே ஆகும். ஆனால் இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ.51.59 விலைக்கு விற்கப்படுகிறது. நாட்டிலேயே பெட்ரோலியப் பொருட்கள் மீது அதிகபட்ச வரி தமிழகத்தில் மட்டுமே விதிக்கப்படுகிறது. ஹரியானாவில் பெட்ரோலியப் பொருட்களின்மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு 9% என்றால் தமிழ்நாட்டில் விதிக்கப்படும் வரி லிட்டருக்கு 33% என்று அறிகிறேன்.
தமிழக அரசு விதித்துள்ள வரியை நீக்கினாலோ அல்லது குறைத்தாலோ, இந்த பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை மட்டுமல்ல, பெட்ரோல், டீசல் விலையையே வெகுவாக குறைக்க முடியும். மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோதப்போக்கை கைவிட்டு ஏற்கனவே உயர்ந்துவரும் விலைவாசிகளில் ஆதாயம் தேடாமல், தாங்கள் விதித்துள்ள வரிகளை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




