இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சாமியாரின் விபசார இணையதளம் ஆன்லைன் புக்கிங்!

E-mail அச்செடுக்க

புதுடெல்லி: மாணவிகளையும் இளம் பெண்களையும் விமான பணிப் பெண்களையும் வைத்து விபசார விடுதி நடத்திய சிவ்முரத்திவேதி என்ற சாமியார் கைது செய்யப்பட்டார். தனது ஆசிரமத்திலேயே விபசார பெண்களை பெண் சாமியார் போல வேடமிட்டு தங்க வைத்து அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு விருந்தாக்கி விபசார தொழிலை நடத்தி வந்துள்ளார்.

கையும் களவுமாக சிக்கிய அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் டெல்லியில் 5 இடங்களிலும், உத்தரபிரதேசத்திலும் பல விபசார விடுதிகளை நடத்தி வந்தது தெரிந்தது. மேலும் சில இடங்களில் அரசு குடியிருப்புகளையே வாடகைக்கு எடுத்து விபசார விடுதியை நடத்தி வந்துள்ளார். ஓட்டல் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து சாமியாராக மாறிய சிவ்முரத் திவேதி. உணர்ச்சி பொங்க ஆன்மீகத்தில் சிறப்பாக சொற்பொழிவு ஆற்றுவார். இவரது சொற்பொழிவை கேட்பதற்கு என்றே இவரது நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

இப்படி ஆன்மீக பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட இவர் தான் மறுபக்கம் விபசார தொழிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது விபசார விடுதியில் இருந்த பெண்கள் அனைவருமே 18 வயதில் இருந்து 30 வயதுக்கு உட்பட்ட அழகிய பெண்களை மட்டுமே விடுதியில் வைத்து இருந்தார். இவர்களில் கல்லூரி மாணவிகள், மாடலிங் அழகிகள், விமான பணிப்பெண்கள், மற்றும் அலுவலக பணிகளில் ஈடுபடுகிறவர்கள் என பலவகை பெண்களும் இருந்தனர். இவர்கள் தவிர வெளிநாடுகளில் இருந்தும் அழகிகளை வரவழைத்து வாடிக்கையாளர்களுக்கு சந்தோசப்படுத்தி உள்ளார்.

வாடிக்கையாளரை தொடர்பு கொள்ள விசேஷ இணைய தளம் ஒன்றையும் ரகசியமாக இயக்கி வந்துள்ளார்.  விஷயம் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக வாடிக்கையாளர்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்