இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

“செக்ஸும் ஆன்மீகம்தான்” கைதான சாமியார் பதில்!

E-mail அச்செடுக்க

புதுடெல்லி:  கைதான சாமியார் சிவ்முரத்திவேதியுடன் டெல்லி, உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு உண்டு. இவர்களில் பாரதீய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகளை சேர்ந்த சில முன்னாள், இன்னாள் எம்.பி.க்களும் உள்ளனர். ஆன்மீகம் ரீதியாகத்தான் அவர்கள் சாமியாரிடம் தொடர்பு வைத்து இருந்தார்கள் என்றும். அழகிகளை அவர்களுக்கு விருந்தாக்கி தான் சாமியார் தன் வசம் இழுத்து வைத்திருந்தார் என்றும் சொல்கின்றனர்.

அரசியல் வாதிகளை மடக்கி தனக்கு வேண்டிய பணிகளை செய்து முடிக்கவும், அழகிகளை சாமியார் பயன்படுத்தி இருக்கலாம் என கருதுவதாக விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சாமியாரின் ஆசிரமத்துக்கு போலீஸ் அதிகாரிகள் சிலரும் அடிக்கடி சென்று வந்துள்ளனர். அவர்களும் சாமியாரிடம் இருந்த அழகிகளை சந்திக்கும் நோக்கத்திலேயே சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

இவரிடம் மட்டும் 200 விபசார பெண்கள் இருந்துள்ளனர். அவர்களை சுழற்சி முறையில் தனது விடுதிக்கு வரவழைத்து வாடிக்கையாளர்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார். வாடிக்கையாளர்களிடம் மிக அதிக கட்டணம் வசூலிப்பது மட்டும் அல்லாமல் அழகிகளுக்கும் நல்ல சம்பளம் கொடுத்துள்ளார். இதனால் அழகிகள் பலர் சாமியாரின் விடுதிக்கு செல்ல அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். ஆசிரமத்தில் போலீசார் நடத்திய சோதனையில் சில டைரிகள் சிக்கின. அதில் அனைத்து விபசார பெண்களின் முகவரி மற்றும் போன் எண்கள் இருக்கின்றன. அவற்றை வைத்து அழகிகளை தேடி பிடிக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரமத்தில் சாமியாரின் சில வங்கி கணக்கு புத்தகங்கள் கிடைத்தன. இதில் உள்ள தகவல்களை பார்க்கும் போது சாமியார் ரூ.2 ஆயிரம் கோடி வரை சொத்துக்கள் சேர்த்து இருக்கலாம் என்றும் சாமியாரின் சகோதரர் டாக்டராக இருக்கிறார். அவருக்காக இங்கு 200 படுக்கை கொண்ட பிரமாண்ட ஆஸ்பத்திரியை சாமியார் கட்டி வருகிறார். இதன் மதிப்பும் பல கோடி இருக்கும் என தெரிகிறது.

சாமியாரிடம் நடத்திய விசாரணையின் போது ஆன்மீக பணிகளில் செய்யும் நீங்கள் விபசார விடுதியும் நடத்தி இருக்கிறீர்களே ? என்றதற்கு சாமியார் செக்ஸ்சும் ஒரு ஆன்மீகம் தான் என்று காஞ்சீபுரம் “செக்ஸ்” அர்ச்சகர் தேவநாதன் போல அசத்தலான விளக்கம் அளித்துள்ளார்.

கருத்துக்கள் (4)Add Comment
0
...
எழுதியவர்: கண்ணன், March 03, 2010

அடிச் செருப்பால...
0
...
எழுதியவர்: haja, March 04, 2010
poli samiyar athu indaiyvil matumthan orai vazi thukil podavum finishu.
0
...
எழுதியவர்: kumar, March 07, 2010
DOG DOG PEEMP.........
0
...
எழுதியவர்: SUSI, March 07, 2010
who is guy ?who give support this fellow? better to catch he is benami

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்