இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மதுரையில் கடந்த ஆண்டு 555 விபத்துகள், 125 பேர் உயிரிழப்பு

E-mail அச்செடுக்க

கடந்த 2009 ஆம் ஆண்டில் மதுரையில் 555 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 125 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரசு பஸ் மோதி 26 பேரும், லாரி மோதி 15 பேரும், மோட்டார் சைக்கிள் விபத்தில் 23 பேரும், சாலையில் நடந்து சென்றபோது வாகனம் மோதி 46 பேரும் உயிரிழந்துள்ளனர். கவனக்குறைவால் தானாகவே விழுந்து 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

காலை 10 முதல் 11 வரை 25, பகல் 11 முதல் 12 வரை 36, பகல் 12 முதல் 1 வரை 36, பகல் 1 முதல் பிற்பகல் 2 வரை 26, பிற்பகல் 2 முதல் மாலை 3 வரை 45, மாலை 4 முதல் 5 வரை 43, மாலை 5 முதல் இரவு 7 மணி வரை 50 என விபத்துகள் பதிவாகி உள்ளன.

காலையில் கல்வி நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு அலுவலகப் பணிக்குச் செல்லும்போதும், பின்னர் மாலையில் திரும்பும் நேரத்திலும்தான் நிறைய விபத்துகள் நடைபெறுகின்றன.

காமராஜர் சாலையில் நடந்த 27 விபத்துகளில் 7 பேரும், பைபாஸ் சாலையில் 33 விபத்துகளில் 8 பேரும், மதுரை -திருப்பரங்குன்றம் சாலையில் 52 விபத்துகளில் 10 பேரும் அழகர்கோவில் சாலையில் 45 விபத்துகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாகப் போலீஸôர் கூறுகின்றனர்.

விபத்தில் இறந்தவர்கள் பெரும்பாலும் 25 வயது முதல் 40 வயதுக்குள்ளானவர்கள்.

இதுகுறித்து மாநகர் போலீஸ் கமிஷனர் பி. பாலசுப்பிரமணியனிடம் கூறியது:

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்வோர் விபத்தில் சிக்கி அதிகமாக உயிரிழக்கின்றனர். எனவே கல்வி நிலையங்கள் மூலம் மாணவர்களை ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திவருகிறோம்.

நகரில் தினமும் 10 பேர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குப் பதிவாகிறது. சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாள்களில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக குறைந்தது 75 வழக்குகள் பதிவாகின்றன.

எனவே ஹெல்மெட் அணிவது, போதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் விபத்தை குறைக்கலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்