இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

நித்யானந்தா செக்ஸ் வீடியோ கிராபிக்ஸ் - சிவசேனா

E-mail அச்செடுக்க
நித்யானந்தா சார்பில் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஏழை, எளியோர்களுக்கு இலவச கல்வி, மருத்துவம் போன்ற உதவிகளை எந்த வித்தியாசமும் இல்லாமல் சமுதாய பணியாக நான் செய்து வருகிறேன். எனக்கு 17 நாடுகளில் 45 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் உள்ளனர். இந்த நிலையில் பிரேமானந்தா என்கிற லெனின் கருப்பன் என்னை சந்தித்தார். அவர்தான் தற்போது மத நம்பிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் நித்யானந்தா என்ற பெயரில் சி.டி.யை ஒரு டி.வி. ஒளிபரப்பியது. அதே படத்தை சில பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளன. ஆனால், அதில் உள்ள ஆள் நான் இல்லை. தொழில்நுட்ப ரீதியில் என் முகத்தை மாற்றி இந்த படங்களை அமைத்துள்ளனர். இது சமுதாயத்தின் என்மீது இருந்த மரியாதையை சீர்குலைத்துவிட்டது.
என் ஆசிரமத்துக்கும், பக்தர்களுக்கும் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது. பக்தர்களின் மத்தியில் மிகப்பெரிய குழப்பத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது. எனவே, இந்த காட்சிகளை ஒளிபரப்பவும், எனது படங்களை பிரசுரிக்கவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இந்த மனுவை சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி மணிவாசகர் விசாரித்தார். நித்யானந்தா சார்பில் மூத்த வக்கீல் ஏ.தியாகராஜன் ஆஜரானார். அவர், `எந்த வகையான ஆதாரமும் விசாரணை இல்லாமல் இந்த படங்களை பிரதிவாதிகள் வெளியிடுகின்றனர். ஏதோவொரு சி.டி. கொடுத்ததும் அதை கண்மூடித்தனமாக வெளியிட்டுள்ளனர். எனவே, நித்யானந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை வெளியிட தடை விதிக்க வேண்டும். தடைவிதிக்காவிட்டால் அவருக்கு ஏற்படும் மானநஷ்டத்துக்கு யார் இழப்பீடு வழங்குவார்கள்? என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்படவில்லை' என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து நீதிபதி மணிவாசகர் இந்த வழக்கை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இந்த பிரச்சினை தொடர்பாக சிவசேனா கட்சி தமிழ் மாநில தலைவர் குமாரராஜா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, ``நித்யானந்தா தொடர்பான பாலியல் படங்கள் கிராபிக்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டவை. இதுபோன்ற படம் வெளியானதற்கு இந்து விரோத சக்திகளின் சதியே காரணம்'' என்றார்.
நித்யானந்தா சார்பில் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஏழை, எளியோர்களுக்கு இலவச கல்வி, மருத்துவம் போன்ற
உதவிகளை எந்த வித்தியாசமும் இல்லாமல் சமுதாய பணியாக நான் செய்து வருகிறேன். எனக்கு 17 நாடுகளில் 45 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் உள்ளனர். இந்த நிலையில் பிரேமானந்தா என்கிற லெனின் கருப்பன் என்னை சந்தித்தார். அவர்தான் தற்போது மத நம்பிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் நித்யானந்தா என்ற பெயரில் சி.டி.யை ஒரு டி.வி. ஒளிபரப்பியது. அதே படத்தை சில பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளன. ஆனால், அதில் உள்ள ஆள் நான் இல்லை. தொழில்நுட்ப ரீதியில் என் முகத்தை மாற்றி இந்த படங்களை அமைத்துள்ளனர். இது சமுதாயத்தின் என்மீது இருந்த மரியாதையை சீர்குலைத்துவிட்டது.

என் ஆசிரமத்துக்கும், பக்தர்களுக்கும் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது. பக்தர்களின் மத்தியில் மிகப்பெரிய குழப்பத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது. எனவே, இந்த காட்சிகளை ஒளிபரப்பவும், எனது படங்களை பிரசுரிக்கவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இந்த மனுவை சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி மணிவாசகர் விசாரித்தார். நித்யானந்தா சார்பில் மூத்த வக்கீல் ஏ.தியாகராஜன் ஆஜரானார். அவர், `எந்த வகையான ஆதாரமும் விசாரணை இல்லாமல் இந்த படங்களை பிரதிவாதிகள் வெளியிடுகின்றனர். ஏதோவொரு சி.டி. கொடுத்ததும் அதை கண்மூடித்தனமாக வெளியிட்டுள்ளனர். எனவே, நித்யானந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை வெளியிட தடை விதிக்க வேண்டும். தடைவிதிக்காவிட்டால் அவருக்கு ஏற்படும் மானநஷ்டத்துக்கு யார் இழப்பீடு வழங்குவார்கள்? என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்படவில்லை' என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து நீதிபதி மணிவாசகர் இந்த வழக்கை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இந்த பிரச்சினை தொடர்பாக சிவசேனா கட்சி தமிழ் மாநில தலைவர் குமாரராஜா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, ``நித்யானந்தா தொடர்பான பாலியல் படங்கள் கிராபிக்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டவை. இதுபோன்ற படம் வெளியானதற்கு இந்து விரோத சக்திகளின் சதியே காரணம்'' என்றார்.
கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: s.murugeshan, March 04, 2010
அன்புடையீர்,
நீங்கள் அனைவரும் ஸ்வாமி நித்யானந்தாவை கிழி கிழி என்று இன்று கிழிக்கிறீர்கள் ஆனால் நான் 15/09/2007 அன்றே சாமியாரையும் குமுதம்,ஆவி,ஜூவி இதழ்களையும் சந்தேகித்து பதிவு போட்டிருக்கிறேன். அதற்கான லிங்க் இதோ

http://kavithai07.blogspot.com/2007/09/blog-post_4622.html

கருத்து எழுதுக

busy
 
நுனிப்புல்