இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

நான் அவன் இல்லை - தலைமறைவு சாமியார் நித்யானந்தா

E-mail அச்செடுக்க
நித்தியானந்தாவின் ஆசிரம இணையதளம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், எங்களுக்கு எதிராக நடந்த கூட்டுச் சதி, கிராபிக்ஸ் வேலைகள், வதந்திகள் ஆகியவைதான் இந்த செய்திகளின் பின்னணியில் உள்ளதாக கருதுகிறோம்.
இதை எதிர்த்து சட்டப்பூர்வமான நடவடிக்கைளுக்குத் தயாராகி வருகிறோம்.
சுவாமிஜியின் அருள் பெற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து சுவாமிஜி மீது அன்புடன் உள்ளனர். இதற்கு மேல் இந்த விவகாரத்திற்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை.
இருப்பினும், இந்த சிக்கலான நேரத்தி்ல் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிஜியின் பின் நிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
வழக்குப் பதிவு:
இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர் கூறுகையி்ல், வழக்கறிஞர்கள் தந்த புகாரை ஏற்று நித்தியானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நித்தியானந்தா தலைமறைவாகிவிட்டார் என்பது உண்மை என்றார்.
நேற்று (03-03-2010) சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நித்தியானந்தாவின் ஆசிரமம் சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
அதில், நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் இருப்பது போன்ற வீடியோக்களையும், படங்களையும் பிரசுரிக்க பத்திரிகைகளுக்கு தடை விதிக்கக் கோரப்பட்டது.
மேலும் ஊடகங்களில் வரும் வீடியோவில் இருப்பது நான் அல்ல. எனவே இந்த வீடியோவையும், புகைப்படங்களையும் சன் டிவி, தினகரன், தமிழ் முரசு, நக்கீரன் ஆகியோர் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
நித்தியானந்தாவின் ஆசிரம இணையதளம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், எங்களுக்கு எதிராக நடந்த கூட்டுச் சதி, கிராபிக்ஸ் வேலைகள், வதந்திகள் ஆகியவைதான் இந்த செய்திகளின் பின்னணியில் உள்ளதாக கருதுகிறோம். இதை எதிர்த்து சட்டப்பூர்வமான நடவடிக்கைளுக்குத் தயாராகி வருகிறோம்.
சுவாமிஜியின் அருள் பெற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து சுவாமிஜி மீது அன்புடன் உள்ளனர். இதற்கு மேல் இந்த விவகாரத்திற்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை. இருப்பினும், இந்த சிக்கலான நேரத்தி்ல் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிஜியின் பின் நிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர் கூறுகையி்ல், வழக்கறிஞர்கள் தந்த புகாரை ஏற்று நித்தியானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நித்தியானந்தா தலைமறைவாகிவிட்டார் என்பது உண்மை என்றார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்