இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மென்பொருள் ஏற்றுமதி வருவாய் 49.7 பில்லியன் டாலர்!

E-mail அச்செடுக்க
மென்பொருள் ஏற்றுமதி மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவைகள் ஏற்றுமதி மூலம் 2009-2010ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு 49.7 பில்லியன் ஏற்றுமதி வருவாய் கிடைக்கும் என்று தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்தார். இத்துறையின் வளர்ச்சி கடந்த ஆண்டை விட 5.5 சதவீதம் அளவிற்கு உயரும் என்றும், 49.7 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 2004-05 முதல் 2008-2009 வரையிலான ஐந்தாண்டுகால சராசரி விகிதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டில் 29 சதவீத வளர்ச்சி இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் காணப்பட்ட பொருளாதாரப் பின்னடைவு காரணமாக இந்திய மென்பொருள் ஏற்றுமதியி்ல் பெரும் சரிவு காணப்பட்டது. என்றாலும் தற்போது பொருளதாரா நிலையில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுவதால் 2010-2011ஆம் ஆண்டில் ஆரோக்கியமான வளர்ச்சி இருக்கும் என்றும் சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்