இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது குற்றச்சாட்டு

E-mail அச்செடுக்க

தேசிய கிரிக்கெட் அகடெமியில்  முறையான அமைப்பு இல்லாதது தான் சுழல் பந்து வீச்சாளர்களின் தர குறைவுக்கு காரணம் என முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் மனீந்தர் சிங் கூறியுள்ளார்.


ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க விழாவில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய மனீந்தர் சிங், உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் இந்தியாவில் கிடைக்காததற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றஞ்சாட்டினார். ஒவ்வொரு ஆண்டும் நாம் 15 முதல் 20 இளம் வீரர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்தும், உலக அரங்கில் சோபிக்காததற்கு காரணம், அவர்களுக்குரிய முறையான பயிற்சியை வாரியம் அளிக்காதது தான் என்றார்.

முன்னாள் சுழல் பந்து வீச்சாளர்கள் பிரசன்னா, பிஷன் சிங் பேடி போன்றவர்களிடம் வாரியம், இது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்