சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் உலகின் முன்னனி நிறுவனங்களின் விளம்பர நாயகனாக இருக்கிறார் என பிரபல விளம்பர நிறுவனம் தெரிவித்துள்ளது. சச்சின், சமீபத்திய சாதனையான அதிகபட்ச ஒருதின ஸ்கோர் எடுத்ததையடுத்து, உலகின் முன்னனி நிறுவனங்கள் பல சச்சினை தங்களின் விளம்பர படங்களில் தோன்ற அழைப்பு விடுத்துள்ளன என ஒக்லிவி என்ற பிரபல விளம்பர நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சச்சின் கிரிக்கெட் விளையாடமலேயே, கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டமுடியும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால் சச்சின் காயம் காரணமாக சென்ற ஆண்டு விளையாடாமல் இருந்த போது இந்திய நிறுவனங்களான, ஏர் டெல், டிவிஎஸ் போன்றவை தங்களிண் விளம்பர படங்களிலிருந்து அவரை விலக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




