பாலியல் சாமியார் சுவாமி நித்யானந்தா மீது மோசடி வழக்குப் பதிவு செய்ய அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.சுவாமி நித்யானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா தொடர்பான படுக்கையறைக் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுவாமி நித்யானந்தாவின் மீது மோசடி வழக்குப் பதிவு செய்ய கோரப்பட்டது. இதனையடுத்து சென்னைக் குற்றப் பிரிவு காவல்துறை அவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து சாமியாரைத் தேடி வருகிறது.
மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அதிர்ந்த, நித்யானந்தாவின் வழக்கறிஞர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இன்று (05-03-2010) சென்னை குற்றப் பிரிவு காவல் துணை ஆணையரைச் சந்தித்த நித்யானந்தாவின் வழக்கறிஞர் இதுகுறித்து முறையிட்டார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாலியல் காட்சிகள் குறித்து மார்ச் 18ஆம் தேதிக்குப் பின் நித்யானந்தா பதில் அளிப்பார் என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




