பாலியல் சாமியார் நித்யானந்தாவுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட நடிகை ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.வெள்ளிக்கிழமை (05-03-2010) அன்று சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அந்த இயக்கத்தின் சட்ட ஆலோசகர் சிவகுருநாதன், பாலியல் புகாரில் சிக்கியுள்ள நித்யானந்தா சாமியாருடன், ஆபாச காட்சிகளில் இடம்பெற்றுள்ள நடிகை ரஞ்சிதா மீது பாலியல் வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும் புகார் மனுவில் கோரியுள்ளதாக கூறினார்.
ரஞ்சிதா மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் நடிகை ரஞ்சிதா தற்போதும் நடிகர் சங்கத்தில்தான் இருக்கிறார். இதுகுறித்து நடிகர் சங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? ஆபாச காட்சிகளில் ரஞ்சிதா இடம் பெற்றுள்ளது குறித்து அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று மனுவில் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (4)

எழுதியவர்: அப்பாவித் தமிழன், March 06, 2010
இது என்னடா பைத்தியக்காரத்தனம்! நுகர்வோர் இயக்கத்தினர் ஏன் இதையெல்லாம் நுகர்கின்றனர்? அவர்கள் இருவரும் வயது வந்தவர்கள். உறவு வைத்துக் கொண்டால் என்ன தப்பு? சட்டப்படி அது முற்றிலும் சரியே. அவர்கள் என்ன நீலப்படத்திலா நடித்தனர்? அவர்களுடைய படுக்கையறையில் காமெரா வைத்து படம் எடுத்தவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
எழுதியவர்: சுதா, March 07, 2010
ரஞ்சிதா மீது எதற்காக நடவடிக்கை எடூக்க வேண்டும்? இதுநாள் வரை அப்பாவி மக்களை கடவுள் பெயரால் ஏமாளிகளாக்கிக் கொண்டிருந்த சாமியார் மீதும் அவன் ஒரு பொம்பளை பொறுக்கி என்பதைத் தெரிந்து கொண்டே அவனுக்குக் கொடிபிடித்துக் கொண்டிருந்த சாருநிவேதிதா போன்ற பொறுப்பற்றவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுங்கள்.
எழுதியவர்: rahul, March 07, 2010
hi friends don't believe any saamiyar like nithyanandha, believe only god who is created this world.
ATTENTION PLS:IN THE SAME TIME PLS DONT PUBLISH THE GIRLS NAME WHO IS INVOLVED IN THIS ILLEGAL ACTIITIES...
I CANT IMAGINE THE GREAT DINDKARAN PAPER PUBLISHED THE PHOTOS LIKE SO SILLY,PLS DONT DO THAT BECAUSE MOST OF THE CHILDRENS ALSO READING THAT NEWS PAPER.....
ATTENTION PLS:IN THE SAME TIME PLS DONT PUBLISH THE GIRLS NAME WHO IS INVOLVED IN THIS ILLEGAL ACTIITIES...
I CANT IMAGINE THE GREAT DINDKARAN PAPER PUBLISHED THE PHOTOS LIKE SO SILLY,PLS DONT DO THAT BECAUSE MOST OF THE CHILDRENS ALSO READING THAT NEWS PAPER.....
கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




