பென்னாகரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்றுவிட்டுத் திரும்பிய காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.வி. தங்கபாலுவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.வெள்ளிக் கிழமை (05-03-2010) இரவில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் பிரச்சாரம் சென்றுவிட்டு, சோகத்தூர் அருகே திரும்பிக் கொண்டிருக்கும் போது தங்கபாலுவின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
தன்மீதான தாக்குதலைக் கண்டித்த அவர், தங்கள் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




