இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வலை பதிவர்களுக்கு செய்தியாளர் அடையாள அட்டை

E-mail அச்செடுக்க
நியூயார்க்கில் வலைப் பதிவர்களுக்கு செய்தியாளர்களுக்கு நிகரான அடையாள அட்டை தந்துள்ளது சட்டத்துறை. முதலில் காவல்துறை தர மறுத்ததை தொடர்ந்து சட்டதுறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சமுக ஊடகங்கள் வளர்ந்து வருவதாலும், வலைப்பதிவில் செய்தியாளர்கள் பெருகி வருவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. "21 நுற்றாண்டில் வலைப் பதிவர்கள் அச்சு, ஒலி, காட்சிசார் ஊடகங்களுக்கு உள்ள செய்தியார்களுக்கு நிகராக கருதப்படுவார்கள்" என கூறியுள்ளார் அட்டார்னி நார்மொன் சீகல். வலைப் பதிவர்கள் நேர்மையான முறையில் சீரிய செய்திகள் தரும் படி ஊடக சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த அடையாள அட்டையை தற்போது பிரபல சமுக ஊடகங்களில் சிறப்பாக செய்திகள் தந்து சமுதாய பணியாற்றிய மூன்று குடியரசு செய்தியாளர்களுக்கு (Citizen Journal) தரப்பட்டுள்ளது.

வலை பதிவர்களுக்கு செய்தியாளர் அடையாள அட்டை தருவது உலகிலேயே இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: அருணா, March 07, 2010
அட! நற்செய்தி!

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்