இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சாமியார் நித்யானந்தா லீலைகள் மேலும் பல சீடிக்கள்

E-mail அச்செடுக்க

நித்யானந்தா சுவாமிகளின் காம லீலைகளை அம்பலப்  படுத்தி அவரது நிஜ முகம்  உலக மக்களுக்கு தெரியக் காரணமாக  இருந்தவர் அவரது சீடர் லெனின் எனத் தெரிய வந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த நித்ய தர்மானந்தா என்ற லெனின் போலி சாமியார் நித்யானந்தாவிடம் உதவியாளராகவும் டிரைவராகவும் வேலை பார்த்தவர் எனத் தெரிகிறது .

 

இன்று சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்த லெனின் சாமியார் சம்பந்தப் பட்ட மேலும் பல சி.டி க்களை ஆணையரிடம் ஒப்படைத்ததாக தெரிகிறது . மேலும் நித்யானந்தா குறித்து புகார் அளித்த லெனின் , நித்யானந்தா  தன்னுடைய பெண் பக்தர்களிடம் பாலியல் கொடுமையில் ஈடு பட்டதாகவும் அதன் காரணமாக பலர்  தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தாவினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் அவர் காவல் துறை ஆணையரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ரஞ்சிதாவுடன் சாமியார் சல்லாபக் காட்சிகள் வெளியானவுடன் அதன் ஒளிபரப்புக்கு தடை கோரிய மனுவில் சாமியார் தரப்பு லெனின் என்ற பிரேமானந்தா என்ற தனது சீடரே இதற்க்கு காரணம் என கூறி இருந்தது குறிப்பிடத் தக்கது.

கருத்துக்கள் (3)Add Comment
0
...
எழுதியவர்: வசந்தவாசல் அ.சலீம்பாஷா, March 07, 2010
போலிச்சாமியார்களை பொதுமக்கள் இனம் கண்டுக்கொள்ள வேண்டும்.
இதுப்போன்ற கயவர்களுக்கு அரசு தக்க தண்டனை வழங்க வேண்டும்.
பொதுவே.. எந்த சமுதாயத்தை சார்ந்தவர்களும் மூட நம்பிக்கை கொள்வதை நிறுத்த வேண்டும்.
0
...
எழுதியவர்: sekar , March 08, 2010
ulagil emarupavaragal irukkum varai ematrupavargal irukkagathan seivargal
0
...
எழுதியவர்: தமிழன்பன், March 09, 2010
இவற்றை காண்கையில் எனக்கு ஒரு பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது,
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது - அதை
சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது.
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது.....

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்