உள்ஒதுக்கீடு வழங்காமல் பெண்களுக்கான மசோதாவை நிறைவேற்றுவது சமூகநீதிக்கு எதிரானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டில் மசோதாவை அதன் பழைய வடிவத்திலேயே நிறைவேற்ற 13 ஆண்டுகளாக இருந்து வந்த தடைகளை அகற்றி, மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற தெரிவிக்கப்பட்டு வந்த ஆலோசனைகளும் ஏற்கப்படாமல் அதை நிறைவேற்ற முற்படுவது ஏமாற்றமளிக்கிறது.
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதனை வரவேற்கிறோம். ஆனால், நாட்டில் 80 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மிக பிற்படுத்தப்பட்ட பெண்களை அதிகார பங்களிப்பில் புறக்கணிப்பதற்கான முயற்சி வேதனை தருகிறது. இந்த இடஒதுக்கீட்டு மசோதாவில் உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது முக்கியமான கருத்தாக வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதை ஏற்காமல் அந்த மசோதாவை நிறைவேற்றுவது சமூகநீதிக்கு எதிரானதாகும்.
எனவே, பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், மதசிறுபான்மையினருக்கும் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சமூகநீதிக்கு தளமாக விளங்கும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கட்சி வேறுபாடின்றி வாதாட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




