அதி விரைவாக பிரபலமாகி வரும் 20/20 கிரிக்கெட் போட்டியின் இந்திய ஐபிஎல் அணிகளில் ஒன்றை பிரபல வீட்டு மின்சாதன தயாரிப்பு நிறுவனமான வீடியோ கானும், பிரபல இந்தி நடிகர் அபிஷேக் பச்சனும் வாங்க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இவர்கள் இணைந்து பஞ்சாப் அணியை விலை பேசி வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் பிரபலமாகி வரும் 20/20 கிரிக்கெட்டின் 2010 ஆண்டு போட்டி இம்மாத மத்தியில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஆரம்பிக்க இருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதிலிருந்தே, சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்து வருகின்றனர்.
ஏற்கனவே பிரீத்தி ஜிண்டா, ஷாருக் கான், ஜூஹி சாவ்லா போன்ற சினிமா பிரபலங்களும், முகேஷ் அம்பானி, விஜய மல்லையா போன்ற தொழில் அதிபர்களும் ஐபிஎல் அணிகளின் சொந்தகாரர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




