இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

போலிச்சாமியார் நித்யானந்தா வழக்குகள் கர்நாடகாவுக்கு மாற்றம்!

E-mail அச்செடுக்க
ஆன்மீக வேடம் தரித்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த போலிச் சாமியார் நித்யானந்தா தொடர்பான வழக்குகள் கர்நாடக காவல் துறைக்கு மாற்றப்பட உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் டி. ராஜேந்திரன் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த நித்திய தர்மானந்தா என்ற கே. லெனின் என்பவர் சென்னை மாநகர ஆணையரிடம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு போலிச்சாமியார் நித்யானந்தாவுக்கு எதிராக புகார் ஒன்று கொடுத்துள்ளார். புகாருக்கு ஆதாரமாக விடியோ சி.டி.யையும் அவர் சமர்ப்பித்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி. ராஜேந்திரன், பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது, "லெனின் கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து சம்பவங்களும் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளன.

எனவே இந்த வழக்குகள் தமிழக காவல்துறை இயக்குநர் மூலம் கர்நாடக மாநில காவல்துறைக்கு மாற்றப்படும்.   கர்நாடக மாநில காவல்துறைக்கு, தமிழக காவல்துறை அனைத்து உதவிகளையும் செய்யும்.

நித்யானந்தா குறித்து இது வரை பொது மக்களிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை. யாராவது புகார் கொடுக்க விரும்பினால் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கலாம்.  நித்யானந்தா மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் எதுவும் சென்னை காவல்துறைக் கட்டுப்பாட்டு எல்லைக்கு உட்பட்டு இல்லை.

லெனின் ஒப்படைத்த சி.டி.யை மத்தியக் குற்றப்பிரிவு துணை கமிஷனர் பார்த்துள்ளார். அந்த சி.டி. 2 மணி நேரம் ஓடுவதாக தெரிகிறது. அந்த சி.டி. "கிராஃபிக்ஸ்' செய்யப்பட்டதா என்பது குறித்து விவரம் தெரியாது. நடிகை ரஞ்சிதாவுக்கு கொலை மிரட்டல் வந்ததாக எந்த புகாரும் வரவில்லை" என்று கூறினார்.
கருத்துக்கள் (4)Add Comment
0
...
எழுதியவர்: paramanda, March 07, 2010
போலி சாமியார்களை கைது செய்வதை விட்டுவிட்டு தேவை இல்லாமல் சாமியாரை கானவில்ல என டிராமா பண்ணாதிங்கப்பா உடனே கைது செய்ங்கப்பா கர்நாடக மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் தண்டனை கொடுக்கவேண்டும் அதவிட்டுட்டு சும்மா பூச்சாண்டி காட்டாதிங்கபா சட்டுபுட்டுன்னு கைது செய்ங்கப்பா
0
...
எழுதியவர்: paramanda, March 07, 2010
தமிழ் கலாச்சாரத்தையே அசிங்கபடுதிடியலப்பா இந்த முருகானந்தம் கோபம் வராது அதுதான் வராதுன்னு சொன்நன்லே அபோறம் ஏபா நித்தியானந்தா cd ய எநக்கு அனுப்பல இதல்லாம் ரெம்ப ஓவர் நித்தியானந்தா அடுத்த பார்ட் டாவது அனுப்புப்பா சரியான லூசா நீ
0
...
எழுதியவர்: paramanda, March 07, 2010
பத்திரிக்கை நிருபர் கவனத்திற்கு தமிழ் எழுத்துக்களில் type செய்வதற்கு தமிழ் font (தமிழ் எழுத்துருவினை )பயன்படுத்து வாய்ப்பினை எங்கள் கறுத்து பதியும் இடத்திலே இடம் பெயர செய்யவும்
0
...
எழுதியவர்: ஷமீம், March 07, 2010
அதிகபட்சம் அடுத்து ஒரு மூன்று மாதங்களுக்கு நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் ஊடகங்களில் ரசிக்கப்படுவர். அதன்பின்....?

பிரேமானந்தா வழக்கு என்ன ஆனது?

சங்கராச்சாரியார் வழக்கு என்ன ஆனது?

சந்திராசாமி வழக்கு என்ன ஆனது?

சமீபத்தில் கேரளாவில் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்ட பல சாமியார்களின் மீதான வழக்குகள் என்ன ஆனது?

ஏழைகளுக்கு உதவி, இலவசகல்வி, மருத்துவம் ஆகியவற்றின் போர்வையில் மக்களிடமிருந்து காணிக்கை என்ற பெயரிலும் பல்வேறு சமூகவிரோத செயல்பாடுகள் மூலமும் சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தின் உதவியுடன், காசுக்கு விலைபோகும் அரசியல்வாதி, காவல்துறையினர், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் துணையுடன் ஜாமீன் பெற்று உல்லாசமாகவோ அல்லது அடுத்து ஒரு 15 ஆண்டுகளுக்கு விசாரணை என்ற பெயரில் வழக்கு இழுத்தடிக்கப்பட்டு சிறையில் மக்கள் வரிப்பணத்தின் மூலம் சொகுசாகவோ வாழ்ந்து கொண்டு தான் இருக்கப்போகின்றனர் இத்தகைய கள்ளச்சாமியார்கள்!

மக்கள் மாறாத வரை மாற்றம் என்பது இல்லை!

ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றும் கேடிகள் இருக்கத்தான் போகின்றனர்!

மனிதனைத் தெய்வமாகப் பார்க்கும் முட்டாள்தனமான கொள்கை மக்களின் மத்தியில் வலம் வரும்வரை, நித்யானந்தா போன்ற கேடிகளுக்குச் சாமியார் போர்வையில் கொண்டாட்டம் தான்!

- ஷமீம்

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்