இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மாட்டுவண்டியிலிருந்து தவறி விழுந்த எம்.எல்.ஏக்கள்!

E-mail அச்செடுக்க
மத்திய அரசுக்கு எதிராக பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மாட்டு வண்டியில் வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் தவறி விழுந்தனர். இதில் அவர்களுக்குச் சிறு காயமேற்பட்டது.

கோவை செஞ்சிலுவைச் சங்கக் கட்டடம் முன்பு அ.தி.மு.க. சார்பில் நேற்று(சனிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அதிமுக கட்சி நிர்வாகிகள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் ஊர்வலமாக வந்த மாட்டு வண்டிகளில் ஆட்டோ, கார் ஆகிய வாகனங்கள் கட்டி இழுத்து வரப்பட்டன.

மாட்டு வண்டிகள் சிறிது தூரம் சென்றபோது வண்டியில் நின்று கொண்டு வந்த எம்.எல்.ஏ.க்கள் மலரவன், பிரேமா ஆகியோர் தவறி கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் தலை, கைகளில் காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரும் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்