சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக தலைவி செல்வி ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மகளிர் தினம் என்பது பெண் விடுதலையின் முதல்படி என்று சொன்னால் அது மிகையல்ல. பெற்ற உரிமைகளை பேணிக் காக்கவும் பெற வேண்டிய உரிமைகளுக்காக போராடவும் பெண்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் நாள் மகளிர் தினம் ஆகும்."அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?" என்னும் நிலை மாறி "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினால் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்!" என்று சொல்லும் அளவிற்கு 20 ஆம் நூற்றாண்டில் மகளிர் முன்னேற்றம் தொடங்கியது.
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி, இவ்வையம் தழைக்குமாம்” என்ற பாரதியின் வாக்கிற்கிணங்க மகளிர் முன்னேற்றம் மலரட்டும். பெண்ணடிமை தீரட்டும். பெண்ணுரிமை வாழட்டும் என்று வாழ்த்தி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி உலகம் முழுவதிலும் உள்ள அன்புச் சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




