நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாரதிய ஜன சக்தித் தலைவர் உமாபாரதி கோரியுள்ளார்.டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,'பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கட்சி பாகுபாடில்லாமல் அனைவரும் ஒருமனதாக ஓட்டளித்து நிறைவேற்ற வேண்டும்.இதற்கு கட்சிக கொறடா உத்தரவு தேவையற்றது. ஓர் எம்பி தனது தனிப்பட்ட உரிமையின் அடிப்படையில் சுயமாக ஒட்டளிக்க அனுமதிக்க வேண்டும். பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு போதுமானதல்ல. இதை 50% உயர்த்த வேண்டும்.
அதில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ஒதுக்கீடு கொண்டு வரலாம். இது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசுவேன்' என்றார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




