இந்தியா முழுவதும் உள்ள 44 பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் ரத்து ஆகுமா என்பது குறித்த தீர்ப்பு திங்கள் கிழமை (08-03-2010) அன்று உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்படுகிறதுமத்திய மனித வள மேம்பாட்டு துறை, சென்ற ஆண்டு போதிய வசதியின்மையை காரணம் காட்டி சுமார் 44 பல்கழைகழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரனை ஏற்கனவே முடிந்த நிலையில், நாளை தீர்ப்பு எதிர்ப்பார்க்கபடுகிறது. போதிய அடிப்படை வசதியின்மை, அதிக கட்டணம் வசூலித்தல், முறையான பேராசிரியர்கள் இல்லாதது போன்ற பல காரணங்களினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தனது பதில் மனுவில் கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் உள்ள இவ்வகையான 44 பல்கழைகழகங்களில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 17 பல்கழைகழகங்கள் உள்ளன எனப்து குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




