மஹாராஷ்டிர நவ நிர்மான் தலைவர் ராஜ் தாக்கரே மீது சுமார் 76 வழக்குகள் பல் வேறு காவல் நிலையங்களில் பதிவாகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.வட இந்தியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது தொடர்பாகவும், மஹாராஷ்டிரத்தில் பிற மாநிலத்தவர்கள் தங்கவோ, பணிபுரியவோ கூடாது என்பதன் தொடர்பாக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது ஆகியவற்றிற்காக வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதில் சுமார் 6 வழக்குகளில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்று இருக்கிறார். மீதமுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கருத்துக்கள் (1)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|





இதே ஒரு குப்பனோ சுப்பனோ இருந்திருந்தால், நாயை இழுத்துக் கொண்டு செல்வது போன்று கொண்டு போயிருப்பர் காவல் துறையினர்.
இந்தியாவில் அநீதி தலைவிரித்தாடுகிறது என்று நொந்து கொள்வதைத் தவிர வேறென்ன சொல்ல...