பாஜக தலைவர் நிதின் கட்கரிக்குச் சொந்தமான காரில் சிறுமியின் சடலம் கிடந்தது குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரான விமல் மற்றும் அசோக் தாக்கரே மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில், "2009-ம் ஆண்டு மே 19-ம் தேதி தற்போது பாஜக தேசிய தலைவராக உள்ள நிதின் கட்கரிக்குச் சொந்தமான காரில் எங்களின் 7-வயது மகள் யோகிதாவின் சடலம் கிடந்தது.
இந்தக் கார் மும்பையின் கிழக்குப் பகுதியில் உள்ள கட்கரியின் பழைய வீட்டு வளாகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. இதனை கொலை வழக்காகப் பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகிறது. விசாரணை சரியான முறையில் செல்கின்றதா என்பதில் சந்தேகம் இருப்பதால், இதுபற்றி மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இம்மனு நீதிபதிகள் ஏ.பி.லாவண்டே, பி.பி.வார்லே ஆகியோர் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், "இவ்வழக்கினை மாநில புலனாய்வு அமைப்பான சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




