நடிகையுடன் உல்லாசமாக இருந்ததாக பரபரப்பு செய்தி வெளியான போலிச் சாமியார் நித்யானந்த சுவாமி மீதான வழக்குகளை இன்று
போலிச் சாமியார் நித்யானந்தா, ஒரு தமிழ் நடிகையுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமீபத்தில் சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னையில் போலிச்சாமியார் நித்யானந்தா மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையே நித்யானந்தாவின் சீடர் லெனின் காவல்துறையினரிடம் சரணடைந்து, "நான் தான் அந்த வீடியோ காட்சிகளைப் பதிவு செய்தேன்" என்று வாக்குமூலம் கொடுத்தார்.
இந்தச் சம்பவம் பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் நடந்ததால் அனைத்து வழக்குகளையும் கர்நாடகத்துக்கு மாற்றுவதாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கர்நாடக மாநில காவல்துறைத் தலைவர் அஜய்குமார் சிங் கூறும்போது, "சாமியார் நித்யானந்தா தொடர்பான வழக்குகளின் விவரங்கள் இன்னும் முழுமையாக எங்கள் கைகளுக்குக் கிடைக்கவில்லை. இந்த வழக்குகளை விசாரிக்க கர்நாடக காவல்துறை தயாராக உள்ளது. இதுதொடர்பாக தமிழக காவல்துறை எங்களைத் தொடர்புகொள்ளவில்லை" என்று கூறினார்.
"இதுவரை நித்யானந்தா மீதான வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை எங்களிடம் டிஜிபி அஜய் குமார் சிங் ஒப்படைக்கவில்லை" என்று பெங்களூர் காவல்துறையும் தெரிவித்துள்ளது. இதற்கிடயில் இன்று(திங்கள்கிழமை) நித்யானந்தா மீதான வழக்குகள் கர்நாடகா காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது. எனவே, நித்யானந்தா மீதான வழக்குகள் திங்கள்கிழமை முதல் விசாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே காவல்துறையிடம் சரணடைந்த லெனினை பெங்களூர் காவல்துறை விசாரணைக்காக பெங்களூருக்கு அழைத்து வரலாம் என்று தெரிகிறது. பிடதி காவல் நிலையத்தில் லெனின் புகார் அளித்தால் தான் அந்தச் சரகத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் விசாரணையைத் துவங்க முடியுமென காவல்துறையினர் தெரிவித்தனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




