இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஆந்திராவுக்குக் கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்

E-mail அச்செடுக்க
திருத்தணியில் இருந்து ரயிலில் ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற சுமார் 1500 கிலோ எடையுள்ள 60 மூட்டை ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினர் கடந்தச் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

திருத்தணி வழியாக ஆந்திரத்துக்கு செல்லும் ரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, திருத்தணி கோட்டாட்சியர் ஜெயகுமார் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் நித்யானந்தம், வடிவேல் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் ஆகியோர் கடந்தச் சனிக்கிழமை பிற்பகலில் ரயில் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சென்னையிலிருந்து திருத்தணி வழியாக மும்பைக்குச் சென்ற விரைவு ரயிலில் சோதனையிட்ட போது, 60 மூட்டைகளில் 1500 கிலோ எடையுடனான ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச்செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினர் திருத்தணி நுகர்பொருள் வாணிபக்கிடங்கிற்குப் பறிமுதல் செய்த அரிசியை அனுப்பி வைத்தனர்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்