இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கு நோட்டீஸ்!

E-mail அச்செடுக்க
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபாலிடம் கட்சி விதிமுறை மீறியது குறித்து விளக்கம் கேட்டு, கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தேர்தலில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து அவரிடம் இந்த விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோரில் நவீன், ஜோ முக்கியமானவர்கள் எனக் கூறப்படுகிறது. அதில், நவீன் என்பவர் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெயபாலின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கான ஏற்பாடுகள் கடந்த சனிக்கிழமை நடைபெற்று வந்த நிலையில், ஜோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். "இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது" என்று அவர்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நவீனைக் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயபாலிடம் விளக்கம் கேட்டு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து, கட்சியின் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு வெளியிட்ட செய்தியில், "எம்.எல்.ஏ ஜெயபால், கட்சியின் சட்ட விதிகளை வேண்டுமென்றே மதிக்காமலும், கட்சியின் குறிப்பாணைகளுக்கு கீழ்படியாமலும் நடந்து கொண்டுள்ளார். மேலும், குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் தேவையற்ற முறையில் கட்சி நடைமுறைகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளார். இதற்கான முதன்மையான ஆதாரங்கள் கட்சித் தலைமைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி விதிகளை மீறி உள்ளார் என்ற அடிப்படையில் ஜெயபால் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர் தனது பதிலை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்