இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பிரபாகரனுக்கு நினைவுச் சின்னம்!

E-mail அச்செடுக்க
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கடந்த வருடம் மே-17 ஆந்தேதி இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டு, நான்காம் ஈழப்போர் முடிவுக்கு வந்தது பிரபாகரனின் இறப்பு உத்தியோகப்பூர்வமாக இன்னும் உறுதிசெய்யப்படாத நிலையில் அவர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் பகுதியில் போரில் வெற்றி பெற்றதன் அடையாளமாக, நந்திக் கடல் ஏரி அருகே இலங்கை ராணுவம் வெற்றிச் சின்னம் அமைத்து வருகிறது.

இறுதிகட்ட போர் நடந்த பகுதிகளிலிருந்து வெளியேறிய பகுதிகளில் தமிழர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன.முல்லைத்தீவு கடல் பகுதியில் இலங்கையில் இதர பகுதிகளைச் சேர்ந்த சிங்கள மீனவர்களை குடியேற்றுவது குறித்து இலங்கை அரசு பரிசீலித்து வருகிறது.

புதுக்குடியிருப்பு, விஸ்வமடு, புதுமத்தளம் ஆகிய பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் வெற்றிச்சின்னம் அமைப்பது மீள்குடியேற்றத்தை மேலும் தாமதப்படுத்தும் யுக்தியாகக் கருத்தப்படுகிறது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்