துருக்கியின் இலாஸிக் மாகாணத்தில் இன்று அதிகாலை 4.32 மணிக்கு புவியதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6 புள்ளிகளாகப் பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்திற்கு இதுவரை 17 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.துருக்கியின் கிழக்கே ஒக்குலார் கிராமத்தில் நிலநடுக்கத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததாகவும், 8 பேர் உயிரிழந்ததாகவும் மாகாண கவர்னர் மாம்மெர் யரோல் தெரிவித்தார்.சுற்றுவட்டார கிராமங்களில் மேலும் ஒன்பது பேர் பூகம்பத்துக்கு பலியானதாக செய்திகள் வெளியாகின்றன. பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் கிராம மக்கள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.பூகம்பத்திற்குப் பிந்தைய அதிர்வுகள் அப்பகுதியில் தொடர்ந்து உணரப்படுவதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. பிந்தைய அதிர்வுகள் ரிக்டர் அளவில் 4.1 என பதிவாகி இருந்ததாக இஸ்தான்புல் புவியியல் மையத் தகவல் தெரிவிக்கிறது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




