இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரின் போது மனித உரிமைகள் பெருமளவு மீறப்பட்டதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க சுதந்திர ஆய்வு குழுவை அமைக்கும் திட்டத்தை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் முன் வைத்தார்.ஆனால் இந்த யோசனையை மகிந்தா ராஜபக்சே நிராகரித்து விட்டார். இதுகுறித்து தன்னுடன் தொலைபேசியில் பேசிய பான் கி மூனிடம் பேசிய ராஜபக்சே,'இதுபோன்ற குழுவை அமைப்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது போன்றதாகும்.எங்களைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான போர் முடிந்து விட்டது.
உலகின் மிக மோசமான ஒரு தீவிரவாத இயக்கத்தை ஆயுத பலத்துடன் இலங்கை ராணுவம் அடக்கி ஒடுக்கிவிட்டது. தற்போது அது முடிந்துபோன விவகாரம். விடுதலைப் புலிகளின் அனுதாபிகளும்,அரசுக்கு எதிராக செயல்படும் சில அமைப்புகளுமே மனித உரிமை மீறல்கள் குறித்து பேசி வருகின்றனர்.எனினும் இந்த குற்றச்சாட்டுகள் பற்றியும், அமெரிக்க வெளியுறவுத் துறை கூறிய புகார்களின் அடிப்படையிலும் விசாரணை நடத்த ஏற்கனவே சிறப்பு கமிட்டியை உருவாக்கியுள்ளோம்.
இலங்கையை விட மோசமான சூழல்கள் நிலவும் மற்ற நாடுகளில் இதுபோன்ற ஆய்வுக் குழுக்கள் அமைக்காத நிலையில், இலங்கையில் மட்டும் சிறப்பு விசாரணைகுழு அமைப்பது தேவையற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் கூறி விட்டார். மேலும் இவ்விவகாரம் குறித்து ஐ.நாவுக்கு விளக்கமாக கடிதம் எழுத உள்ளதாகவும் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வீடோ அதிகாரத்தை வைத்து இஸ்ரேல் தன்மீதான ஐநா சபையின் கண்டனத் தீர்மானங்களை முறியடிப்பது போல் சீனாவின் வீடோ அதிகாரத்தையும் இந்தியாவின் செல்வாக்கையும் வைத்து இலங்கையும் ஐநாவின் கோரிக்கைகளை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




