இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

திமுகவுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

E-mail அச்செடுக்க
"பென்னாகரம் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி பா.ம.க.வினர் மீது தி.மு.க.வினர் நடத்தும் தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் பா.ம.க. தன்னை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடும்" என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் மோதலில் காயமடைந்த பா.ம.க.வைச் சேர்ந்த இருவர் பென்னாகரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து ஆறுதல் கூறிய அன்புமணி ராமதாஸ், பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, "பென்னாகரம் இடைத்தேர்தலில் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்காமல், வாக்காளர்களுக்கு பணம், வேட்டி, செல்போன்களை தி.மு.க.வினர் வழங்கி வருகின்றனர். அதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதைத்தடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாவட்ட காவல் துறை அதிகாரிகளும், வருவாய்த் துறை அதிகாரிகளும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.

இரு தினங்களில் மட்டும், தேர்தல் பணியாற்றி கொண்டிருந்த பா.ம.க. நிர்வாகிகள் 11 பேரை தி.மு.க.வினர் தாக்கியுள்ளனர். தேர்தல் அமைதியாக நடைபெற தி.மு.க.வினர் ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிடில் பா.ம.க. தன்னை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடும்" என்று கூறினார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்