"நடிகையுடன் உல்லாசமாக இருந்த போலிச் சாமியார் நித்யானந்தா மீது தெரிவிக்கப்பட்டுள்ள புகார் குறித்து காவல்துறை முதல்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது" என சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன் தெரிவித்தார்.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் காவலர்களுக்காக நடத்தப்பட்ட மருத்துவ முகாமை நேற்று(திங்கள்கிழமை) காலையில் கமிஷனர் தொடங்கி வைத்தார். அதன் பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, "நித்யானந்தா மீது வழக்கறிஞர்கள் அளித்த புகார்கள் அடிப்படையில் மோசடி வழக்கும், லெனின் என்ற தர்மானந்தா அளித்த புகார் அடிப்படையில் கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் வழக்கறிஞர்கள் புகார் அடிப்படையிலான வழக்கு மட்டும் மாநகர காவல்துறையால் விசாரிக்கப்படும். இதற்கான விசாரணையை மாநகர காவல்துறை துவங்கி விட்டது. லெனின் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு கர்நாடக காவல்துறைக்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான பரிந்துரைகள் டிஜிபிக்கு அனுப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன" என்று கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




